கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற ஹொட்டல்கள் தவிர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை நத்தார் தினத்துக்காக மூடப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாளைய(25) நத்தார் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 29ஆம் திகதி உடுவாப் போயா தினத்தில் சில்லறை விற்பனை அனுமதி பெற்ற நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version