ஹோமாகம பகுதியில்  காதலர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது, காதலி தனது காதலனை கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகும்புர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹோமாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெய்யந்தர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version