நாட்டில் மேலும் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 282ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 712 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 32 ஆயிரத்து 51 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 45 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version