கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவின்  பகுதியொன்றில்,  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றுகாலை(26.12.2020) 10 மணியளவில் பல்லவராயன் கட்டசோலை  மாதிரி கிராமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின்  சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும், கால் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version