யாழ்ப்பாணம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் நால்வருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லேரியா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆய்வுகூடங்களில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே குறித்த நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய நான்கு பேரே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் தொற்று அடையாளம் காணப்பட்ட 16ஆவது நாளில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 109ஆக உயர்வடைந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version