கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில், நாடளாவிய ரீதியில்  மோட்டார் சைக்கிள்களில் தங்கச் சங்கிலி திருட்டுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அரிவித்துள்ளனர்.

அமைச்சருடனான கலந்துரையாடல் ஒன்றின் போது இதனை பொலிஸார் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், பாதைகளில் தனியாக பயணிக்கும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்லையிட்டு செல்லும் நடவடிக்கைகள் பல அடுத்தடுத்து பல இடங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

இந்த தங்கச் சங்கிலி கொள்ளைகளில் அதிகரிப்பு தற்போது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களை  கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மாலை நேரங்களில், தனியாக நகைகளை அணிந்து செல்லும் போது கூடிய கவனத்துடன் இருக்குமாரும் குறுக்கு வீதிகளில் இத்தகைய சம்பவங்கள்  அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கோரியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version