உக்ரைனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

மேற்படி தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த திங்கட் கிழமை(28.12.2020) பி.ப 2.06 மணியளவில் சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப்பயணிகளுடன் இலங்கைக்கான முதல் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை காலமும் விமானநிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, மேற்படி உக்ரேனிய பயணிகள் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேற்படி சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மெற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version