யாழ்ப்பாணம், அரியாலை, புங்கன்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வீட்டு வளாகத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதுதொடர்பில் இளம் பெண்ணின் வீட்டுக்கு இன்றைய தினம் சென்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது சிசு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சிசு இயற்கையாக உயிரிழந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ பரிசோதனையின் பின் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version