பிறந்தது புத்தாண்டு 2021 – உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள்
உலகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
2021-ம் ஆண்டு பிறந்ததை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் வேற்றுமைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புதிய வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம் இந்த ஆண்டு வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவி வருகிறது.
வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து கொண்டாட்டங்கள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பிரம்மாண்ட வாண வேடிக்கைகள், வண்ணமயமான ஒளி அலங்காரங்கள் செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.