நீர் நிலையில் விழுந்து யானை ஒன்று உயிருக்கு போராடும் சம்பவம் வவுனியா பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியா கண்னாட்டி பெரியகட்டு காட்டு பகுதியில் உள்ள நீர் நிலையில் கால்கள் இயலாத காரணத்தினால் எழுந்து நடக்கமுடியாமல் நீர்நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் யானையினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு குறித்த யானையினை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version