இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா என்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் நயன்தாரா, சமந்தாவுக்கு சிறப்பு பரிசை ஒன்றையும் வழங்கியுள்ளார். தங்கம் மற்றும் வைரத்தால் ஆன கம்மல் ஒன்றை நயன்தாரா சமந்தாவுக்கு பரிசளித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version