தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 9 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள ஒடல்சல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(23). கூலி தொழிலாளி.

இவருக்கும், மொரப்பூர் அடுத்த அரசு மொரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவரது மகள் சோனியாவுக்கும்(21) கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சோனியா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

ஜெயக்குமார் கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில், மாமியார் பொன்னம்மாவுடன் சேனியா வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பொன்னம்மாளுக்கு, சோனியாவின் உறவினரான பவானி என்பவருடன் தவறான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை சோனியா, தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கணவன் – மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சோனியாவுக்கு இன்று வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் சோனியா தூக்கிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, அவரது தந்தை சிங்காரத்துக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சோனியாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன் பேரில், அரூர் போலீசார் சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக மாமியார் பொன்னம்மாவுக்கும், சோனியாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது, தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும், திருமணமான 11 மாதத்தில் சோனியா உயிரிழந்ததால் வரதட்சணை கொடுமை காரணமா? என வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

9 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுததி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version