உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன, பாகுபலி நடிகை அனுஷ்கா ஷெட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக சுற்றி திரிபவர். தமிழில், சுந்தர் C இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு தென்னிந்திய திரையுலகில், ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளன.
அனுஷ்கா ஷெட்டி ஹிட் படங்கள்:
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக சைலன்ஸ் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த புது படங்களில் அவர் நடிக்காமல் இருக்கிறார்.
அனுஷ்கா ஷெட்டி திருமணம்:
35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்கள் மத்தியில் அமுல் பேபியாக, நீங்க இடம்பிடித்து விட்டார். மற்றொரு புறம் இவரது பெற்றோர்கள் இவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியும், பிசியாக உள்ளனர்.
குண்டாக இருக்கும் அனுஷ்கா:
அனுஷ்கா ஷெட்டி, ”சைஸ் ஜீரோ” படத்திற்கு உடல் எடையை அதிகரித்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, ஸ்லிம் லுக்கிற்குமாறி இருந்தார், தற்போது மீண்டும் குண்டாகியுள்ளார்.
அவர் உடல் எடையை குறைக்க முடியாமல், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஆனாலும் எடையை அவரால் குறைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அனுஷ்கா புது படங்களில் நடிக்கவில்லை என தெரிகிறது.
‘ஆர்ஆர்ஆர்’ திரைப்பட விழா:
பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.
இப்படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.