ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள், ஜனாதிபதி, பிரதமருக்கு நாட்டின் நிலைமையை தெளிவு படுத்தினர். அதன்பிரகாரம், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு சாதகமான சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனாதிபதியை காப்பாற்றுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது. இன்று (03) அல்லது நாளை (04) அவர் பதவியை இராஜினாமா செய்வார். அதன்பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்.
அந்த புதிய அமைச்சரவை நியமனத்தின் போது, அமைச்சர் டலஸ் அழகபெரும, பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் இராஜினாமா செய்வதை ஜனாதிபதி விரும்பவில்லை என அறியமுடிகின்றது. அத்துடன், பிரதமர் இராஜினாமா செய்துவிட்டார் என்ற செய்தியை பிரதமர் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.