தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகன் கஞ்சாவுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த பெண் தன் மகனை கம்பத்தில் கட்டி வைத்து, போதைக்கு அடிமையானதற்காக அவனை தண்டிக்க கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளார்.
மேலும் மற்றொரு பெண்ணின் உதவியுடன், முகம் முழுவதும் மிளகாய்ப் பொடியை பூசினார். கண்களில் ஏற்பட்ட எரிச்சலால் சிறுவன் அலறித்துடித்தான்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதை கைவிடுமாறு பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனது மகன் கஞ்சா பழக்கத்தை கைவிடுவதாக உறுதி அளித்தால்தான் தண்டனையை கைவிடுவேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
தான் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதாக சிறுவன் உறுதியளித்ததை அடுத்து அந்த பெண் தனது மகனின் கைகட்டுகளை அவிழ்த்துவிட்டார்.
இந்த காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.