வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வெங்காயத்திற்கு ஒருவர் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது, மற்றொருவர் மின்சார வயரின் உதவியுடன் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்துள்ளார்.
22 வயதுடைய செல்வராசா கேதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p