நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டே இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் முடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version