சென்னை: கணவன், 2 கள்ளக்காதலன்கள் என 3 பேருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார் பவித்ரா.. கடைசியில் இப்போது ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கிறார்..!

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா புறநகரில் உள்ள ஹைவேஸில், கடந்த வருடம் ஒரு ஆண் சடலம் விழுந்து கிடந்தது.. கடந்த நவம்பர் 25-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது..

இறந்துபோன இளைஞருக்கு 25 வயதிருக்கும்.. ஆனால் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார்.. இதை பார்த்து பதறிபோன மக்கள், போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்களும் விரைந்து வந்து, இளைஞரின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞரின் கழுத்து பலமாக நெரிக்கப்பட்டிருப்பதும், அதன் மூலமே அவரை கொலை செய்யப்பட்டதும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரியவந்தது…

இதையடுத்து போலீசாரின் விசாரணையும் துரிதமாக ஆரம்பமானது.. அந்த இளைஞர் ஹிந்துபூர் தாலுகா கொள்ளாபுராவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் பிரசன்ன குமார், லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.


தலைமறைவு

இதையடுத்து கவுரிபிதனூர் போலீசார் கொள்ளாபுரா சென்று நேரடியாக விசாரணை நடத்தினர்… அப்போதுதான் இறந்துபோன லாரி டிரைவர் பிரசன்ன குமாருக்கும், பவித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது…

இது தொடர்பாக விசாரிக்க சென்றால், அதற்குள் பவித்ரா தலைமறைவாகி விட்டார்.. எனவே, போலீசார் பவித்ராவின் செல்போன் சிக்னலை வைத்து மடக்கி பிடிக்க முயன்றனர்.. அதன்படியே, குறுகிய நேரத்திலேயே பவித்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர்..

 

பார்ட் டைம் வேலை

ஆனால், பவித்ரா மட்டும் சிக்கவில்லை.. அவருடன் ரிஷப் என்பவரும் சிக்கினார்.. இவர் தான் பவித்ராவின் 2வது கள்ளக்காதலன்..

அவர்களை அழைத்து வந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் பவித்ராவுக்கு ஏற்கனவே ஒருவருடன் கல்யாணமானது தெரியவந்தது..

2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. ஹிந்துபூரில் ஒரு தனியார் கம்பெனியில் பார்ட் டைம் வேலை பார்த்து வந்துள்ளார் பவித்ரா.. அப்போதுதான், லாரி டிரைவர் பிரசன்ன குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

பிறகு, தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் மேனேஜரான வட மாநிலத்தை சேர்ந்த ரிஷப் என்பவருடன் 2வது கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது…

அதாவது, கணவருடன் வாழ்ந்து கொண்டே, 2 கள்ளக்காதலன்களுடனும் தொடர்பில் இருந்துள்ளார் பவித்ரா.

ஒருகட்டத்தில் பவித்ராவின் நடவடிக்கையில் பிரசன்ன குமாருக்கு சந்தேகம் வந்தள்ளது.. அதனால் ஒருநாள் அவரை பின்தொடர்ந்து சென்றபோதுதான், ரிஷப்புடன் கள்ளக்காதல் இருப்பதை கண்டுபிடித்தார்..


ரிஷப் காதலன்

இதனால் பிரசன்ன குமார் ஆத்திரமடைந்து, ரிஷப்புடனான உறவை கைவிடும்படி பவித்ராவை கண்டித்துள்ளார். ஆனால் பவித்ரா ரிஷப் தான் வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டார்.. இதுதான், இருவருக்கும் தகராறாக வெடித்துள்ளது..

இறுதியில் ஆத்திரம் அடைந்த பவித்ரா, பிரசன்ன குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதுபற்றி 2-வது கள்ளக்காதலனான ரிஷப்பிடம் கூறியுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலர்கள்

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி பவித்ரா, பிரசன்ன குமாரிடம் நேரில் பேசவேண்டுமென்று ஹிந்துபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

பிறகு, நண்பர் சம்புலிங்கம் என்பவருடன் சேர்ந்து, கள்ளக்காதலர்கள், லாரி டிரைவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்..

பிறகு சடலத்தை, அவரது லாரியிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, ஒதுக்குப்புறமாக வீசிவிட்டும் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. இப்போது 3 பேரும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

 

Share.
Leave A Reply

Exit mobile version