பிரேசிலில் வசித்து வருபவர் அர்தூர் உஸ்ரோ. நடிகரும், மொடலுமான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய 9 காதலிகளை திருமணம் செய்து கொண்டார்.

அந்நாட்டின் சட்டப்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. ஆனால் அதற்கு எதிர் கருத்து கொண்ட அர்தூர் சட்டப்படி ‘லுவானா கஜ்கி‘ என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளதுடன் ஏனைய 8 பேருடனும் ஒன்றாக வசித்து வந்தார்.

”ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் காதலுடன் வாழ்வதே தனது லட்சியம் எனவும் இதன் காரணமாகவே இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததாகவும் தெரிவித்திருந்நதார்.

இந்நிலையில் தன்னுடைய மனைவிகளில் ஒருவரான அகதா என்பவரை விவாகரத்து செய்யவுள்ளதாக அர்தூர் அறிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகதா தன்னை முழுவதுமாக சொந்தம் கொண்டாட நினைப்பதாகவும், அது தன்னுடைய கொள்கைக்கு விரோதமாக இருப்பதால் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அர்தூர் தெரிவித்துள்ளார்.

மேலும் ”தற்போது ஒரு குழந்தை மட்டுமே தனக்கு இருப்பதாகவும் அனைத்து மனைவிகளுடனும் குழந்தை பெற்றுக்கொள்வதே தனது விருப்பம் எனவும், தற்போது ஒருவரை இழப்பது வருத்தமாக இருந்தாலும் 10 மனைவிகள் என்னும் எனது கனவினை எதிர்காலத்தில் நிறைவேற்றுவேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version