சர்வதேச நாணய நிதியத்திடம்  (IMF)  இலங்கை சுமார்  4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை (18) சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த விஷேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த இலங்கை தூதுக் குழு இவ்வார இறுதியில் அமரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்றி தலைமையிலான தூதுக்குழுவே இவ்வாறு   அமரிக்காவின் வொசிங்டன் நகரை நோக்கி பயணிக்கவுள்ளதுடன்  அந்த தூதுக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி  நந்தலால் வீரசிங்க,  நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

குறித்த தூதுக் குழு, வொசிங்டன் நகரில் 5 நாட்கள் தங்கியிருந்து  இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version