ரஷ்ய தரப்பு கப்பலில் இருந்த வெடிமருந்துகள் தீப்பிடித்ததால் இந்த சேதம் நிகழ்ந்ததாக தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. அதேநேரம், மேற்கத்திய நாடுகளிடம் ராணுவத் தளவாட உதவியைப் பெற்று ரஷ்ய ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகிறது.

உக்ரைனின் ஓடெசா நகரின் கடலில் ரஷ்யாவின் மோஸ்க்வா கப்பல் கடுமையாக சேதம் அடைந்தது.

ரஷ்ய தரப்பு கப்பலில் இருந்த வெடிமருந்துகள் தீப்பிடித்ததால் இந்த சேதம் நிகழ்ந்ததாக தெரிவித்தது.

ஆனால், உக்ரைன் ராணுவம் தங்களின் நெப்டியூன் போர்க்கப்பல் தடுப்பு ஏவுகணையை கொண்டு அந்தக் கப்பலை தாக்கியதாக அறிவித்தது.

நெப்டியூன் போர்க்கப்பல் தடுப்பு ஏவுகணை என்றால் என்ன? அது எப்படி இலக்கைத் தாக்கும்? என்பது குறித்து இந்தப் பகுதியில் பார்ப்போம் வாருங்கள்.

எந்த வகையான கப்பல் ஏவுகணை, மோஸ்க்வாவை தாக்கியது?

நெப்டியூன் என்ற அழைக்கப்படும் 2 போர்க்கப்பல் தடுப்பு ஏவுகணைகள் மோஸ்க்வாவை தாக்கியது.

இதில் என்ன முரண் என்றால் இந்த ஏவுகணைகள் ரஷ்யாவின் Kh-35 போர்க்கப்பல் ஏவுகணையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நெப்டியூன் ஏவுகணை உக்ரைன் பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இது தயாரிக்கப்பட்டது.

2014 இல் உக்ரைனில் கிரிமியா பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து உக்ரைனின் கடலோரப் பகுதிகளுக்கு ரஷ்யாவின் அச்சுறுத்தல் வரலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நெப்டியூன் ஏவுகணையை உக்ரைன் ராணுவம் உருவாக்கத் தொடங்கியது.

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, நெப்டியூன் ஒரு கடலோர போர்க் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாகும்.

இது 300 கிமீ தொலைவில் உள்ள கடற்படை கப்பல்களை அழிக்கும் திறன் கொண்டது. முன்னதாக, கடல் மார்க்கமாக வரும் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க நெப்டியூன் ஏவுகணை எங்களுக்கு உதவும் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மோஸ்க்வா என்றால் என்ன?

ரஷ்யாவின் மாஸ்கோ நகரை குறிப்பிடும் வகையில் மோஸ்க்வா என்ற இந்தக் கப்பலுக்கு பெயரிடப்பட்டது. 12,490 டன்களை இடம்பெயறச் செய்யும் திறன் கொண்டது இந்த போர்க்கப்பல்.

இது ரஷ்ய கடற்படையின் கருங்கடல் கடற்படையின் முதன்மையானது.

சுமார் 500 பணியாளர்களைக் கொண்டுள்ளது. மோஸ்க்வா முதலில் 1983 இல் ஸ்லாவா எனத் தொடங்கப்பட்டது.

இது 2000 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பிறகு மோஸ்க்வா என மாற்றப்பட்டது. ஸ்நேக் தீவில் உக்ரைன் படைகளை ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு மோஸ்க்வா போர் கப்பலில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு உக்ரைன் கடற்படை ராணுவத்தினர் ஒரு போதும் அது நடக்காது. வந்த வழியே திரும்பிச் செல் என்று பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து உலக அளவில் இந்தப் போர்க்கப்பல் குறித்து தெரியவந்தது.

புதன்கிழமை தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது?

நெப்டியூன் க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல் TB-2 ட்ரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கருங்கடலில் ரஷ்ய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியதாக உக்ரேனியர்கள் முன்பு கூறினர்.
ஆனால் எதுவும் மோஸ்க்வாவைப் போல பெரியதாகவோ அல்லது சேதத்தை சந்தித்ததாகவோ தெரியவில்லை.

சேதம் எவ்வளவு கடுமையாக இருந்தது?

போர்க்கப்பல் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட மோஸ்க்வா அதன் ஒரு பக்கம் சாய்ந்து, அது மூழ்கும் தருவாயில் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், இவை உக்ரைன் மற்றும் ரஷ்ய கடற்படையால் உறுதிப்படுத்தப்படவில்லை. மோஸ்க்வாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் கப்பலில் தீப்பிடித்ததற்கான உறுதிப்படுத்தப்படாத காட்சிகளும் உள்ளன.

 

ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை புதுப்புது அறிக்கையில் வருகின்றன. கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதை மட்டும் ரஷ்யர்கள் தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version