மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்வதன் காரணமாகவே  வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம்  கட்டண அடிப்படையில் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

20 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவி;த்தார்.

புதன்கிழமை (13.04.2022) பகல் 1 மணிமுதல் அமுலாகும் வகையில்  மோட்டார் சைக்கிள்களுக்கு 1000  ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கும், கார்,வேன் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களுக்கு 5000 ரூபாவிற்கும் எரிபொருள் நிரப்புவதற்கான வரையறை கட்டணம் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வழமையான நாட்களை காட்டிலும் தற்போது எரிபொருள் கொள்முதலுக்கான கேள்வி அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

எரிபொருள் விநியோக்தில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு தரப்பினர் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பித்து பலமடங்கு விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதை ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைமை குறித்து பொது மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான முறையில் சேமித்து வைத்துள்ள எரிபொருளை கையகப்படுத்த நாடுதழுவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொது மக்கள் தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்வதன் காரணமாகவே வாகனங்களுக்கான  எரிபொருள் விநியோகம் கட்டண அடிப்படையில் தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபாவிற்கும் ஏனைய வாகனங்களுக்கு 5000 ரூபாவிற்கும் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

பேரூந்து மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் எவ்வித வரையறைகளும் விதிக்கப்படவில்லை.

20 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு இம்மாத காலத்திற்குள் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version