முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என
சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பசில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பசில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலோ அல்லது இரத்மலானை விமான நிலையத்திலோ இருந்து வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பசில் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version