நீண்டஇடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா, வடிவேலு சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபுதேவா, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மனதைத் திருடி விட்டாய்’. அந்தப் படத்தில் பிரபுதேவா, வடிவேலு, விவேக் ஆகியோர் காமெடியில் அசத்தி இருப்பார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
அதிலும் ஒரு காட்சியில் வடிவேலு, ‘சிங் இன் த ரெயின், ஐ வான்ட் சிங் இன் த ரெயின்’ என்று பாடி நடிக்கும் காட்சியை யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் பிரபுதேவா, வடிவேலு தற்போது சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு ‘சிங் இன் த ரெயின்’ பாடலைப் பாடி, பிரபுதேவாவைக் கட்டிப் பிடித்து மகிழ்ந்துள்ளார்.