வவுனியா செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (18.04) மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெளியில் சென்ற கணவன் காலை 11 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு கணவனால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.