கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (18) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமானது ஓமந்தை, அரச வீட்டு திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்த போது தண்டவாளப் பகுதியில் பயணித்த இளைஞன் ஒருவருடன் புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புகையிரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு ஓமந்தை புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டம் 6 ஆம் ஓழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய சுந்தரமூர்த்தி சுதன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தற்கொலை முயற்சியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version