கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்ய்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தன.
முகூர்த்த நாளும் வந்தது. மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் சூழ்ந்திருந்தனர். மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார்.
மணமேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். மணமகன் அருகில் நிற்க செய்து, அவர் கழுத்தில் மாலையை போட சொன்னார்கள்.
மாப்பிள்ளையும் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். அப்போது, மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். பிறகு, திடீரென மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார்.
உறவினர்கள், குடும்பத்தினர் எதுவும் புரியாமல் விழித்தனர். மணமகளை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், முடியவில்லை.
மணப்பெண் ரூமுக்குள் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதனால் மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. எவ்வளவோ தட்டியும் அந்த பெண் கதவை திறக்கவில்லை.
இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார்  விரைந்து வந்து பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போதுதான், மணமகளின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது..
இன்னொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறினார்.
பிறகு, இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்தனர். ஆனால் அப்போதும், மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
இறுதியாக, பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேறி ஆரம்பித்தனர்.
அப்போது போலீசார் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால், முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும், சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது என்று மணப்பெண்ணுக்கு அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
Share.
Leave A Reply

Exit mobile version