ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அரச மற்றும் தனியார் சேவையின் 10000 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இன்றைய தினம் நாடுதழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கத்தினரது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும், தெரிவிக்கும் வகையில் தோட்ட தொழிற்துறையினரும், விசேட பொருளாதார மத்திய நிலையத்தினதும், சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் மற்றும் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டதுடன், போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

துறைமுகம், போக்குவரத்து, பொருளாதார மத்திய நிலையம்,தபால்,சுதந்திர வர்த்தக வயலம், வங்கி கட்டமைப்பு, மின்சாரம், பெற்றோலியம், சுகாதாரம், புகையிரத சேவை ஆகிய முக்கிய சேவைத்துறையின் கட்டமைப்பு செயலிழந்தால் கொழும்பு மற்றும் கொழும்பு புறநகரினதும்  அன்றாட செயற்பாடு முழுமையாக ஸ்தம்பிதமடைந்து

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கம் ஒருவார காலத்திற்குள் பதவி விலக வேண்டும்.பதவி விலகாவிடின் எதிர்வரும் 6 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுப்படுவோம்என தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சுகாதார சேவை -வைத்தியசாலை கட்டமைப்பு மருந்து பொருட்களின்  தட்டுப்பாடு காரணமாக மருத்துவ துறை பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு பொதுமக்களை பாதிப்பிற்குள்ளாக்க விரும்பவில்லை.

கடந்த காலங்களில் தொழில் உரிமைகளை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டோம். ஆனால் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட முடியாது.

இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றினைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

சேவைக்கு சமூகமளித்த வண்ணம் போராட்டங்களில் ஈடுப்படுவோம் என அரச மருத்துவ சங்கம், தாதியர்சங்கம், இரசாயன ஆய்வு கூட துறைசார் நிபுணர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் சுகாதார தரப்பினர் சேவைக்கு சமூகமளித்த நிலையில் கலந்துக்கொண்டதை பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களில் அவதானிக்க முடிந்தது.

சுகாதார சேவை நிலையங்களுக்கு சேவையாளர்கள் கறுப்பு நிறத்திலான உடையணிந்து வருகை தந்ததையும்,உணவு இடைவேளையின் போது சேவை நிலையங்களுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

கல்வி சேவை

 

ஆசிரியர் – அதிபர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வீழ்ச்சியடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பாடசாலை வேன் சாரதிகள் சங்கம் கலந்துக்கொண்டதால் பாடசாலை போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பாடசாலை கல்வி மற்றும் கற்பித்தல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தபால்சேவை

 

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடப்பட்டதால்தபால் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

26ஆயிரம் தபால் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதுடன், 653 தபால் நிலையங்களும், 3410 உபதபால் நிலையங்களும் இன்றைய தினம் மூடப்பட்டமை எமது போராட்டத்தின் ஆரம்ப வெற்றியாகும் என தபால் சேவை ஒன்றினைந்த சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

புகையிரச்சேவை

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்30இற்கும் அதிகமான புகையிரத தொழிற்சங்கங்கள் ஈடுப்பட்டதால் பொதுபயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.புகையிரத நிலையங்களின் காத்திருந்த பொதுபயணிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பெற்றோலிய வளங்கள் சேவை

 

Thinakkural.lk

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழான சுமார் 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தொழிற்சங்கத்தினரது போராட்டத்தினது போராட்டத்தின் காரணமாக எரிபொருள் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  அறிவித்துள்ளது.

துறைமுக சேவை

துறைமுக சேவையில் உள்ள 17 தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முழுமையாக பதவி விலகாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்ஈடுப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.

விசேட பொருளாதார மத்திய நிலையம்

அரசாங்கத்திற்கு எதிராக முக்கிய சேவைத்துறையினர் முன்னெத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கம் வகையில் வகையில் நாரஹேன்பிடிய விசேட பொருளாதார மத்திய நிலையம்,தம்புத்தேகம ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களின் சேவை முழுமையாக முடக்கப்பட்டன.

நாரஹேன்பிடிய விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் 120 கடைகள் முழுமையாக மூடப்பட்டதுடன்,அதன் சேவையாளர்கள் பொருளாதார மத்திய நிலையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வங்கி கட்டமைப்பு

 

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் அரச மற்றும் தனியார் வங்கிகளின் சேவைகள் நேற்றைய தினம் முழுமையாக ஸ்தம்பிதமடையவில்லை.வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காப வங்கி சேவையாளர்கள் முழுமையாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படாமல், சேவைக்கு சமூகமளித்த நிலையில்போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என ஒன்றினைந்த வங்கி சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

தோட்டத்தொழிற்துறை

அரச மற்றும்தனியார் தொழிற்சங்கத்தினரது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையகம் உட்பட பெருந்தோட்ட பகுதிகளின் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்துறையினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு,அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆட்பதிவு சேவை திணைக்களத்தின் சேவை பாதிப்பு

அரச நிறுவனங்களின் சனநெரிசல் மிக்க நிறுவனமாக கருதப்படும்ஆட்பதிவு சேவை திணைக்களத்தின் சேவை நேற்றைய தினம் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.சாதாரண நாட்களுக்கு சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான சேவை பெறுநர்கள் திணைக்களத்திற்கு வருகை தருவார்கள்நேற்றைய தினம் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தினால் திணைக்களத்தின்சேவையாளர்கள் சமூகமளிக்கவில்லை என அறிய முடிகிறது

கொழும்பு மற்றும் புறநகர் பகுதியின் நிலைமை

சாதாரண தினங்களில் சனநெரிசல் மிக்கதாகவும்,பரப்பரப்பான தன்மையில் காணப்படும் கொழும்பு உட்பட கொழும்பின் புறநகர் பகுதி நேற்றை தினம் வெறிச்சோடி போயிருப்பதை அவதானிக்க முடிந்தது.கொழும்பின் முக்கிய பல்பொருள் அங்காடி கடைகள் மூடப்பட்டதுடன்,கொழும்பில் முக்கிய வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்களும்,கடைகளும் மூடப்பட்டதால் கொழும்பு நகரத்தின் நாளாந்த நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டை புகையிரதத்தை சங்கமித்த தொழிற்சங்க போராட்டம்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணியாக வந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஒன்றினைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரசாங்கத்திற்கு ஒருவார காலவகாசம்

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் ஒருவார காலத்திற்குள் பதவி விலகாவிடின் எதிர்வரும்6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடுதழுவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுப்படுவோம்என தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவித்தனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version