யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்காய்வின் போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் பொலிசாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு சரியான விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அவ் வர்த்தகருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவ்வாறாக எரிவாயுவினை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version