`நீங்கள் வீட்டோடு கணவரையும் சேர்த்து வாங்கிக்கொள்வதாக இருந்தால் சிறப்புத் தள்ளுபடியும் உண்டு என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டல் பால் என்கிற பெண், ரியல் எஸ்டேட் தளங்களில் மற்றும் பேஸ்புக்கில் கொடுத்துள்ள விளம்பரம்தான் இன்றைக்கு வைரலாகியிருக்கிறது.
இவருக்கு இருக்கிற சொந்தமான மூன்று வீடுகளில் ஒன்றை விற்கும் அறிவிப்பு அது. அந்த வீட்டின் படங்களில் தன்னுடைய புஜபல பராக்கிரமத்தை காட்டியவாறு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் 53 வயதான ரிச்சர்ட் ஷைலு.
ஷைலுதான் கிரிஸ்டலின் கணவர். ஏழு வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.
சமீபத்தில்தான் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். விவாகரத்து ஆனாலும் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்கிறார்களாம்.
இருவரும் சேர்ந்து அவர்களின் மகனைப் பார்த்து கொள்கின்றனர். பிரிவிற்கு பிறகு ரிச்சர்டுக்கு வாழ்வதற்கு ஒரு வீடு கிடைக்கும் என்பதால்தான் வீட்டோடு சேர்த்து அவரையும் விற்கிறேன் என்கிறார் கிரிஸ்டல்.
ரிச்சர்ட் ஷைலு
‘அற்புதமான மறுவாழ்வு அளிக்கப்பட்ட கணவன் உடன்’ என்கிற Tag உடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீடு பனாமா கடற்கரை நகரத்தில் அமைந்திருக்கிறாதாம். 3,80,000 டாலர் வாங்கப்பட்டது, இப்போது விற்பனை தொகை 6,99,000 அமெரிக்க டாலர்.
நீங்கள் வீட்டோடு முன்னாள் கணவரையும் சேர்த்து வாங்கிக் கொள்வதாக இருந்தால் சிறப்பு தள்ளுபடியும் உண்டு. வீடு சரி, அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என கேட்கிறீர்களா… இவர் சமைக்கவும் சுத்தம் செய்யவும் வீடு பராமரிக்கவும் உங்களுக்கு உதவுவார் என்கிறார் கிரிஸ்டல். வீட்டைப் பற்றியும் தன் முன்னாள் கணவரைப் பற்றியும் சுவாரசியமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
`XL அளவில் இருக்கும் இவரின் காதுகளுக்கு விரிசல் கேட்டுவிடும், உடனே வீட்டில் அதனை சரிசெய்துவிடுவார்,
தலையில் கவர் அணிந்து கொண்டு தான் சமைப்பார் பெரும்பாலும் முடி இல்லை என்ற போதும்’ இப்படியாக அவரது அறிவிப்பு செல்கிறது.