யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நெல்லியடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்