இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் பாதுகாக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் நல்லெண்ணத்தைக் குறித்து நிற்பதாக பிரதமர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காது மனிதாபிமான அடைப்படையில் நோக்கும் தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாடு மாநில அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version