இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவி வருகின்ற கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு தமிழ் நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் பாதுகாக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் நல்லெண்ணத்தைக் குறித்து நிற்பதாக பிரதமர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.