21 வருடங்களாக மனைவியை சவப் பெட்டியில் வைத்திருந்த வயோதிபர்

தாய்லாந்து நாட்டில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த மனைவியின் உடலை  தனது வீட்டில் 21 வருடங்களாக சவப்பெட்டியில் வைத்திருந்து  தகனம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

2001 இல் அவரது மனைவி மரணித்ததிலிருந்து, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சான் சன்வச்சரகர்ன் என்ற வயோதிபர் தனது மனைவியின் உடலை தலைநகரம் பேங்கொக்கிலுள்ள பேங் கென் மாவட்டத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வயோதிபரான சான் சன்வச்சரகர்ன் தனது மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்யாமல் மரணித்துவிடுவார் என்று கவலைப்பட்டார்.

அதனையடுத்து, பெட்ச்காசெம் க்ருங்தெப் என்ற ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் அவரது சடலத்தை தகனம் செய்ய முடிவு செய்தார்.

தகனம் மற்றும் இறுதிச் சடங்கிற்கான  ஏற்பாடுகளில் அறக்கட்டளை அவருக்கு உதவியது.

உயர் இரத்த அழுத்தத்தால் அவரது மனைவி உயிரிழந்ததாகவும், மேலும் அவரது உடலை புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக நோந்தபுரியில் உள்ள வாட் சோன்பிரதர்ன் ரங்சரித்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இருப்பினும், அவர் அவரது உடலை தகனம் செய்யாமல் எடுத்து வந்து சவப்பெட்டியில் வைத்திருந்தாகவும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

72 வயதான அவர் தனது மனைவியின் சவப்பெட்டியுடன் தொடர்ந்து பேசி, சவப்பெட்டியை முற்றிலும் சுத்தமாக வைத்திருந்தார்.

அவரது மனைவியின் இறுதிச் சடங்குகளை முடிக்க சென்னுக்கு உதவிய பெட்ச்காசெம் க்ருங்தெப் அறக்கட்டளை, அவரது வீடு ஓடும் தண்ணீருடன் கூடியசேமிப்பு வசதிபோன்றது, ஆனால் மின்சாரம் இல்லை. வீட்டில் நன்கு பராமரிக்கப்பட்ட சவப்பெட்டிக்குள் உலர்ந்த நிலையில்சடலம் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தகனத்திற்குப் பிறகு, கடைசி சாம்பலை  ஒரு கலசத்தில் வைக்கப்பட்டது, அதை சென் அவர் இறக்கும் வரை தன்னுடன் வைத்திருப்பதாகக் தெரிவித்தார்.

தன்னார்வலர்கள் உணவு மற்றும் பானங்களை வழங்குவதன் மூலம் 72 வயதான சென்னை  அவரது மறைந்த மனைவியின் தகனத்திற்கு உதவிய, அறக்கட்ளை  இப்போது பராமரித்து வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version