இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல் இதுவரை அழிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளின் பட்டியல்

 

கொழும்பு காலி முகத்திடல், தன்னெழுச்சி போராட்டக்காரர்களின் மீது குண்டர்கள் நேற்று (09) தாக்குதல் நடத்தியதை அடுத்து,  ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

பின்வரும் SLPP அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் திங்கட்கிழமை (9) தாக்கப்பட்டன

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ (கார்ல்டன் இல்லம் – வீரகெட்டிய & மெதமுலன வலவ்வ)

ராஜபக்ஸ குடும்பம் ( D. A. ராஜபக்ஸ அருங்காட்சியகம் மற்றும் நினைவுச்சின்னங்கள் தாக்கிஅழிக்கப்பட்டன)

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ (மல்வானை வீடு)
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ (வீடு)
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (கண்டி வீடு)
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (ஹோகந்தர வீடு)
முன்னாள் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (வீடு)
முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (வீடு)
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (களுத்தரை அலுவலகம் & பயாகல வீடு)
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (குருநாகல்  & கொழும்பு அலுவலகங்கள்)
முன்னாள் அமைச்சர் நிமல் லன்ஸா (நீர்கொழும்பு வீடு)
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன (நுகேகொடை வீடு)
முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண (காலி வீடு)
முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ (வென்னப்புவ  வீடு)
முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன (அநுராதபுரம் வீடு)
முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க (ஹிங்குரானை வீடு)
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (நாவலப்பிட்டி கட்சி அலுவலகம்)

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க (உடுகம்பொல வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க (வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் M.சந்திரசேன (வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் நுவன் அத்துக்கோரள (வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் (கடவத்தையில் உள்ள வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத் (பொலன்னறுவை வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன (மீரிகம வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆரச்சி (பண்டாரவளை வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க மாயாதுன்னே (புத்தளம் அலுவலகம் & வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன (கம்பளை அலுவலகம்)
பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர (குருநாகல் வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த (வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் அனுப பஸ்குவல் (மத்துகம வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவல (பலாங்கொடை வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க (ஹொரணை வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் D.B.ஹேரத் (வாரியபொல வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி (பெல்மடுல்ல வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க (தெனியாய வீடு, கட்சி அலுவலகம்)
பாராளுமன்ற உறுப்பினர் W.D. வீரசிங்க (வட்டினாகல வீடு)
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் (வீடு)

மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ (வீடு)
ஹொரணை மேயர் (வீடு)

அத்தனகல பிரதேச சபை தலைவர் (வீடு)
கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை தலைவர் (வீடு)
வலல்லாவிட்ட பிரதேச சபை தலைவர் (வீடு)
எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் (வீடு)
அம்பாறை – தமண பிரதேசசபை தவிசாளர் மங்கள குணவர்தன (வீடு, வாகனங்கள்)

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா (காத்தான்குடி வீடு)

Share.
Leave A Reply

Exit mobile version