நாட்டில் நாளை 10 ஆம் திகதி காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

அந்த வகையில் நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளது..

அந்த வகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version