முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை, இளைஞர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் திருகோணமலை கடற்படை முகாமில் தற்போது பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version