கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரம் குடும்பங்களுக்கான இந்திய நிவாரணப் பொதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கென 20 ஆயிரம் பொதிகளை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் தெரிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இந் நிவாரணத்திற்கான பயனாளிகள் கிராமங்கள் தோறும் அங்கு பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பு அடங்கிய சுயாதீன குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவு செய்யப்படுகின்ற குடும்பங்கள் வறுமைக்குட்பட்ட மற்றும் உணவுத் தேவைக்குரிய குடும்பங்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version