அதில் பெரும்பாலும் “பக்கிங்ஹாம் அரண்மனை, வின்ட்சர் கோட்டை அல்லது பிற அரச குடியிருப்புகளில் வாரத்திற்கு 40 மணி நேர வேலை இருக்கும்.

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிஸபெத் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனை மிகவும் பிரபலமான சுற்றுலா தலம். வேலையாட்கள், சமைப்பவர்கள், ஓட்டுநர்கள் என அந்த இடத்தைப் பராமரிக்க சுமார் 1000 நபர்கள் வரை அங்கே வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த அரச குடும்பத்தில் வீட்டிலேயே தங்கியிருந்து பணிபுரியும் (live-in housekeeper) வேலையாட்களுக்கான பணியிடம் காலியாக இருப்பதாக விளம்பரம் ஒன்று வெளியானது.

அந்த விளம்பரத்தில், பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கான தகுதிகள், தேவைகள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அதில் ”பெரும்பாலும் பக்கிங்ஹாம் அரண்மனை, வின்ட்சர் கோட்டை அல்லது பிற அரச குடியிருப்புகளில் வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை இருக்கும்.

வேலையாட்களுக்கு 7.97 பவுண்டுகள்  ஒரு மணி நேரத்திற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஒரு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக 9.90 பவுண்டுகள் கொடுக்கப்படும் நிலையில், அரச குடும்பத்தின் வேலையாட்களுக்கான ஊதியமானது அந்தத் தொகையில் இருந்து 2 பவுண்டுகள் குறைவாக உள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version