இலங்கையில் கடந்த 9ஆம் தேதி காலி முகத்திடல் பகுதி மற்றும் கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்ததாக, செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற குழப்ப நிலை, அதனையடுத்து காலி முகத்திடலில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக மூத்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.”

அந்த உயரதிகாரி, “குற்றத்தடுப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இருப்பிடத்துக்குச் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும்”  கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version