சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 45 பேர் கடற்படையினரால் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மற்றும் தென் கடற்பிராந்தியங்களில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 பேரை ஏற்றிச்சென்ற நீண்ட நாள் மீன்பிடி படகொன்றும் 19 பேரை ஏற்றிச்சென்ற மற்றுமொரு நீண்ட நாள் மீன்பிடி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கற்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version