வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.
எனினும் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நால்வரில் இருவர் அங்கு நீரில் மூழ்கினர்.

இந்நிலையில் நீரில் மூழ்கிய மேலும் இருவரையும் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட மக்கள், பொலிசார் நீண்ட நேரத்தின் பின்னர் சடலங்களாக மீட்டுள்ளனர்.
நீரில் மூழ்கிய இருவரையும் குளத்தில் தேடுதல் மேற்கொண்ட மக்கள், பொலிசார் சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் நதீச விதுசர (வயது 15) என்பவருடைய சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் நீண்ட நேரமாகியும் கைலாஸ் என்ற 16 வயது சிறுவனை தொடர்ந்தும் தேடிய போது சுமார் ஒரு மணித்தியாலயம் 30 நிமிடங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.