8 வெவ்வேறு இடங்களில் பார்த்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அனைவருடனும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

தாமரைப் பூ போன்ற இல்லற வாழ்க்கையில் தண்ணீராக மனைவியும், இலையாக கணவனும் இருப்பதுண்டு.

வெளியே இருந்து பார்க்க தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டுவதில்லையோ, அதுபோல் ஒட்டியும் ஒட்டாமலும் குடும்பத்தை நடத்திச் செல்லும் பெருமை கணவன், மனைவிக்கு உண்டு. மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால், கணவன் அமைவதும் மனைவிகள் கொடுத்த வரமாகும்.

இந்தநிலையில், தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை காதல் திருமணம் ச்யெது அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

அத்தனை மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் இருக்கின்றனர். 8 மனைவிகளை திருமணம் செய்து கொண்டது எப்படி என விவரிக்கிறார்.

முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்துள்ளார். அவரை திருமணம் செய்த பிறகு இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார். நாங் எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரியும் முன்பே அவரை திருமணம் செய்துவிட்டார்.

 மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை சமூகவலைத்தளங்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவரது 7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது பார்த்துள்ளார். அவரது 8-வது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க செல்லும் போது பார்த்துள்ளார்.

அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்குள் சண்டையே வருவது இல்லையாம்.

அதற்கு முக்கியமான காரணம் சோரூட்டின் குணம் தான் என சொல்லப்படுகிறது அத்தனை மனைவிகள் மீதும் பாரபட்சமின்றி அன்பை காட்டுவாராம்.

ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என அவரது மனைவிகளிடம் கேட்ட போது அவர்கள் அளித்த ஒரே பதில் “அவர் மீது தீராத காதல் வந்துவிட்டது” என்பது தானாம். 8 மனைவிகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வரும் செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version