ஜேர்மனியின் பேர்லினில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு பேர்லினின் மக்கள் அதிகமாக காணப்படும் என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் வீதியை விட்டு விலகி நடைபாதை மீது ஏறி கடையொன்றின் முன்னால் மோதி நின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வருடங்களிற்கு முன்னர் டிரக்கொன்றை நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்ட பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.