எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார துண்டிப்பு உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இந்த விசேட அரச விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version