யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில் வாள்களுடன் வீடொன்றினுள் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை முகங்களை மறைத்தவாறு,  வாள்களுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு ,ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்தவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version