மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி (21). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை தேடினர். அப்போது அவர், வயல்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் பிணமாக கிடந்துள்ளார்.

அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில், ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த அவரின் உறவுக்கார இளைஞனான கரண் என்ற 21 வயது இளைஞர்.

ப்ரீத்தியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் வசிக்கும் பகுதியில் இருந்து 430 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து வந்துள்ளார்.

சுடுகாட்டில் ஜோதியின் உடலை எரியூட்டுவதை பார்த்த கரண், ஜோதியின் இழப்பை தாங்க முடியாமல் தானும் அந்த எரியும் சிதையிலேயே குதித்தார்.

இதை பார்த்த பொதுமக்கள், கரணை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டு, தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கரண், ப்ரீத்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version