புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
புகையிரத பயணம் தொடங்குவதற்கு முன்னர், சாரதி உதவியாளரின் வழக்கமான பரிசோதனையின் போது அதிகாலை 4:40 மணியளவில் புகையிரத பெட்டிக்குள் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என நம்பப்படுகிறது, அந்த நபர் வெள்ளை நிற சாரம் மற்றும் சிவப்பு கருப்பு கலந்த நீண்ட கை சட்டை அணிந்திருந்தார். சரியான அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவரிடமிருந்து பொல்கஹவெலயிலிருந்து பண்டாரவளை வரையிலான புகையிரத பயணச்சீட்டும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.