பாம்புகடித்தவருக்கு வழங்கப்படும் மருந்து இல்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் 16 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன்னாள் விளையாடிக்கொண்டிருந் 16 வயது மாணவனை பாம்பு கடித்ததை தொடர்ந்து பெற்றோர் அனுராதபுரம் போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் அங்கு பாம்புகடிக்கான மருந்து இருக்கவில்லை என மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஒரு மருந்தை கொடுத்தனர் ஏனைய மருந்துகள் எங்கே என கேட்டபோது இல்லை என தெரிவித்துவிட்டனர் மருந்துபற்றாகுறையால் எனது மகனை இழந்துவிட்டேன் என தந்தை வேதனை வெளியிட்டுள்ளார்.