யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டை உடைத்து 8 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீட்டில் இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் உள்ளவர்கள் நிகழ்வு ஒன்றுக்கு சென்று மாலை 5 மணிக்கு திரும்பிய போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version